பாடசாலைகள் ஆரம்பிபக்கப்பட்ட பின்னரே பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவிப்பு!

Thursday, June 4th, 2020

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் பாடசாலைகள் ஆரம்பிபக்கப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோலிச குடியரசின் நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் பரீட்சைகள் தாமதமாகுமா என பரீட்சைகள் ஆணையாளரிடம் வினவப்பட்டதற்கு பதிலளித்த அவர், “நாட்டின் தற்போதைய நிலைமையை அவதானித்து வருகின்றோம். இன்னமும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எந்தவிதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை.

எனவே பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே பரீட்சைகள் தொடர்பில் ஏதாவது தீர்மானம் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

முகக்கவசங்களை பயன்படுத்திய பின் எரித்து விடுங்கள் : பேராசிரியர் அஜந்த பெரேரா வலியுறுத்து!
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கண்டறியப்படவில்லை - தேசிய கணக்...
மறுசீரமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் - அமைச்சர் காஞ்சன விஜேசேகர...