பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு!

Friday, November 20th, 2020

நாட்டின் சில பிரதேசங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளைத் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் திறக்கப்படும் என கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது.

குறித்த பாடசாலைகள் தரம் 6 முதல் 13ஆம் வகுப்பு மாணவர்களின் 3 ஆம் தவணைக் கற்றல் செயற்பாடுகளுக்காக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய மாணவர்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பாக உரிய வேலைத்திட்டம் அரசாங்கத்தால் முன்வைக்கப்படவில்லை என அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: