பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்களின் வருகை எதிர்பார்த்ததைவிட அதிகளவில் உள்ளது – ஆசிரியர்கள் மாகாணங்களின் எல்லையை கடக்க அதிபரின் குறுந்தகவல் போதுமானது – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, October 22nd, 2021

200 இற்கு குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டடுள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை எதிர்பார்த்ததைவிட அதிகளவில் காணப்பட்டதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கையில் இன்னும் சில தினங்களில் இந்த வரவு வீதம் மேலும் அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் மாணவர்களின் வருகை 7 வீதமாகவும் ஆசிரியர்களின் வருகை 17 வீதமாகவும் காணப்பட்டது. வடமாகாணத்தில் மாணவர்களின் வருகை 21 வீதமாகவும் ஆசிரியர்களின் வருகை 45 தொடக்கம் 52 வீதமாகவும் காணப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் 39 வீதமான மாணவர்களும் 45 வீதமான ஆசிரியர்களும் நேற்று பாடசாலைகளுக்குச் சென்றதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தை விட ஏனைய மாவட்டங்களில் மாணவர்களின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

கொவிட் தொற்றுக் காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை பல கட்டங்களின் கீழ் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதன் முதற்கட்டமாக 200 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகள் நேற்று ஆரம்பமானது.

இதனிடையே கிழக்கு மாகாணத்திலேயே அதிகளவான மாணவர்கள் நேற்று பாடசாலைக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: