பாடசாலைகளின் கல்விச் செயற்பாட்டை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர்கள் சேவை சங்கத்தின் தலைவர் வலியுறுத்து!

Thursday, July 7th, 2022

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளின் கல்விச் செயற்பாட்டை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர்கள் சேவை சங்கத்தின் தலைவர் யல்வெல பஞ்ஞாசேகர தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறுவர்களின் கல்வி தொடர்பில் சிந்தித்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்கால சந்ததியினர் தொடர்பில் சிந்திக்க வேண்டிய நாட்டின் தலைவர்கள் சுயநலமாக சிந்தித்தமையே இந்த நிலை ஏற்பட பிரதான காரணமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தினை சீரழித்து தற்போதைய சிறுவர்களின் கல்வியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: