பாகிஸ்தான் போர்க்கப்பல் கொழும்பில்!

Friday, November 3rd, 2017

நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று எதிர்வரும் திங்கட் கிழமை கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளதாக பாகிஸ்தான் தூதரகம்தெரிவித்துள்ளது.

சீனத் தயாரிப்பான பிஎஸ்என் சாய்ப்  என்ற ஸ்வோர்ட் வகையைச் சேர்ந்த போர்க்கப்பலே கொழும்புக்கு வரவுள்ளது.

இரண்டு நாடுகளினது கடற்படைகளுக்கு இடையிலான பலமான மரபுசார், நல்லெண்ண மற்றும் பயிற்சிகள் நோக்கில் இந்த போர்க்கப்பல் கொழும்புக்குப் பயணம் வரவுள்ளது.

இந்தப் போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் போது, இலங்கை கடற்படையினருடன் பல்வேறு நிபுணத்துவ பயிற்சி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும்திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 6ஆம் திகதி வரவேற்பு நிகழ்வு ஒன்று இடம்பெறும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது

Related posts: