பாகிஸ்தானில் கோர விபத்து – 36 பேர் பலி!

Tuesday, June 8th, 2021

தெற்கு பாகிஸ்தானில் இரண்டு பயணிகள் புகையிரதம் நேருக்கு நேர் மோதியதால் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த கோர விபத்து நேற்று இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் தெற்கு பகுதியான சிந்து மாநிலத்தில் இரண்டு பயணிகள் புகையிரதம் நேருக்கு நேர் மோதியதில் 36 பேர் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பலர் காயடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தினையடுத்து மீட்பு பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை துரிதமாக மீட்டு அவர்களுக்குத் தேவையான முதலுதவிகளை வழங்கியிருந்தனர்.

 000

Related posts: