பழிவாங்கல்களில் நாம் ஒரு போதும் ஈடுபட மாட்டோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, September 30th, 2020

கடந்த கால செயற்பாடுகளுக்காக நாம் ஒரு போதும் பழிவாங்கல்களில் ஈடுபடப்போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட இன்று அமைச்சு பதவிகளிலுள்ள பலர் வீணாக சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றது. அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பீர்களா? என கேள்வி எழுப்ப்பட்டது.

இதங்கு பதிலளித்த பிரதமர் – தனிப்பட்ட பிரச்சினை தொடர்பில் எதுவும் சிந்திக்கவில்லை. நாம் ஒன்றுக்கு ஒன்று செய்யும் விருப்பம் கொண்டவர்கள் அல்லர். நாம் ஒரு போதும் பழிவாங்கியதில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: