பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுக்க பொறிமுறை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்

பல்கலைக்கழகங்களில் புகிடிவதையை தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமூகத்தில் இடம்பெறும் , பாலியல் இம்சைகள், அச்சுறுத்தல், பீதியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தியிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் தலைமை அதிகாரியாக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் திருமதி உமா குமாரசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு கிடைக்கப்பெறும் அனைத்து முறைப்பாடுகளும் விசாரிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளும் வழங்கப்படும்.
இணையத்தளத்தின் ஊடாக முறை;பபாடுகளை சமர்ப்பிக்க முடியும்.
இதற்கு மேலதிகாக 0112-123-700 அல்லது 0112-123-456 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.
இது தொடர்பாக மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தெளிவுபடுத்தப்படும். இவற்றுடன் தொடர்புபட்ட குற்றமிழைத்தவர்கள் பல்கலைக்கழக கல்வியை இழப்பதுடன் மாத்திரமன்றி சிறைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என்றும் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.
இதேவேளைபல்கலைக்கழக கல்வி ஆண்டை ஒக்டோபர் மாதம் 1ம் திகதி ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் முதல் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சர்வதேச பல்கலைக்கழகங்களில் கல்வி வருடம் ஒக்டோபர் மாதத்திலேயே ஆரம்பிக்கப்படுகின்றன. மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இது பெரும் வசதியாக அமையும்.
2016 – 2017 பல்கலைக்ககழக கல்வி வருடத்திற்காக 71 ஆயிரத்து 111 மாணவர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளன. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு முன்னர் மாணவர்களைப் பதிவு செய்வதே ஆணைக்குழுவின் எதிர்பார்ப்பாகும்.
Related posts:
|
|