பலாலிக்கு வருகின்றது இந்திய குழு !
Thursday, September 12th, 2019பலாலி விமான நிலைய மதிப்பீடுகளைச் செய்வதற்காக, இந்திய தொழில்நுட்பக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிகபப்டுகின்றது.
குறித்த குழு எதிர்வரும் வாரம் இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலாலியிலிருந்து இந்திய நகரங்களுக்கான விமான சேவைகள், ஒக்டோபர் 16ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படும் எனவும், பலாலி விமான நிலையத்திலிருந்து, கொச்சி, மும்பை, புதுடெல்லிக்கான சேவைகள் தொடங்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
அதோடு விமான சேவைகளை ஆரம்பிக்க இலங்கை சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபை, தற்போது மும்முரமான நடவடிக்கைகளை எடுத்து வருவருகின்றது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் வழிகாட்டலின்கீழ் இதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பலாலி விமான நிலையத்தை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவிடம் இருந்து கொடை உதவிகள் கிடைப்பது பற்றி கலந்துரையாடப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித அதிகாரபூர்வ உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|