பரீ்ட்சை மண்டப மோசடி தொடர்பில் 1911 க்கு உடன் அழையுங்கள்!

Friday, August 5th, 2016

நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் போது, பரீட்சார்த்திகள் மேற்கொள்ளும் மோசடிகள் மற்றும் அவர்களுக்கு உதவி வழங்கும் நபர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் அனைத்து முறைப்பாடுகள் குறித்தும் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் இவ்வாறான முறைப்பாடுகளை வழங்க 24 மணித்தியாலங்களும் செயற்படும் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இதன்படி, முறைப்பாட்டாளர்கள் 1911 என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் இலக்கத்திற்கோ அல்லது பாடசாலை பரீட்சை நிலையங்களின் 0112 784 208, 0112 784 537 , 0113 188 350 மற்றும் 0113 140 314 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அழைப்பினை ஏற்படுத்தி தகவலளிக்க முடியும்.

பரீட்சார்த்திகள் மேற்கொள்ளும் மோசடிகள் மற்றும் அவர்களுக்கு உதவி வழங்கும் நபர்கள் மாத்திரமன்றி பரீட்சை நிலையங்களில் நடைபெறும் பல்வேறு விதமான மோசடிகள் தொடர்பிலும், இந்த இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி கூறமுடியும் என, டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: