பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

Wednesday, August 15th, 2018

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணிகள் இன்று(15) ஆரம்பமாகின்றன.

35 மத்திய நிலையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

இன்று(15) ஆரம்பமாகும் பணிகள் எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதுடன், மதிப்பீட்டுப் பணிகளில் 8,000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

Related posts: