பரீட்சை மோசடிகளைத் தடுக்க கடும் நடவடிக்கை !

Friday, December 8th, 2017

ஆரம்பமாகவுள்ள க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்கள், மீட்டல் வகுப்புக்கள், தனியார் ரியூட்டரிகளில் நடத்தப்படும் வகுப்புக்கள் யாவும் புதன்கிழமை நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்துள்ளார்.

இத்தடையை மீறிச் செயற்படும் அனைவருக்கெதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்படுவர் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் எங்காயினும் இடம்பெறுமாயின், அது பற்றி பரீட்சை திணைக்கள ஹொட்லைன் 1911 அல்லது பொலிஸ் அவசர தொலைபேசி 119 அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையங்கள் என்பவற்றிற்கு அறிவிக்குமாறு அவர் கோரியுள்ளார்.

மேற்படி பரீட்சை தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளன. பரீட்சார்திகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அண்மைய வெள்ளம், மண்சரிவு காரணமாக அனுமதி அட்டைகள் பாதிக்கப்பட்டிருப்பின், புதிய அனுமதி அட்டைகளை இணைப்பு நிலையங்கள் ஊடாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பரீட்சை டிசம்பர் 21 ஆம் திகதி வரை இடம்பெறும். இப் பரீட்சைக்கு 6,88,573 பேர் தோற்றுகின்றனர். இதில் 4,29,493 பேர் பாடசாலை பரீட்சாரத்;திகள். 2,59080 பேர் தனியார் பரீட்சார்த்திகளாவர்.

மோசடி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் பரீட்சை நிலையங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், தேவைக்கேற்ப கண்காணிப்புக் கமெராக்களும் பொருத்தப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts: