பரீட்சையின் போது மேலும் 10 நிமிடங்கள் வழங்க நடவடிக்கை!

Tuesday, May 29th, 2018

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை என்பவற்றுக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் விடை எழுத வழங்கப்படும் நேரத்தினை 10 நிமிடங்களால்அதிகரிக்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 03 மணித்தியாலங்களைக் கொண்ட வினாப் பத்திரத்துக்கு 10 நிமிட நேரம் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தீர்மானம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் ஆகியோருடன் கலந்தாலோசனை செய்தே எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம்குறிப்பிட்டுள்ளார்.


ஐ.நா. கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா!
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் தரக்கோரிப் போராட்டம்!
இலங்கை உயர்ஸ்தானிகரின் கோரிக்கை மலேசிய மேல் நீதிமன்றினால் நிராகரிப்பு!
சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான பரீட்சை கணனி மயப்படுத்தல்!
அரச நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிருபம்!