பயணத்தை நிறைவு செய்துபுறப்பட்டார் பான் கீ மூன்!

Saturday, September 3rd, 2016

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்றிரவு 10.30 மணியளவில் விஷேட விமானம் ஒன்றின் மூலம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த அவர் ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களையும் சந்தித்திருந்தார்.  அத்துடன் காலி மற்றும் யாழ் மாவட்டத்திற்கான விஜயத்திலும் அவர் ஈடுபட்டிருந்தார்.

அவரது விஜயத்தின் இறுதி நிகழ்வாக நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து னொண்டிருந்தார்.  இதன்போது, இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுனக்கப்படுகின்ற நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரவித்த அவர், எப்பொழுதும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறியிருந்தார்.

Ban Ki moon 5484545

  

Related posts: