பயணத்தடையை மீறியோருக்கு சட்ட நடவடிக்கை – கோப்பாய் பொலிசார் நடவடிக்கை!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறி வீதியில் பயணித்தோருக்கு எதிராக கோப்பாய் பொலிசாரால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை முற்கொண்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பணத்தடையினை மீறி பொதுமக்கள் வீதிகளில் பயணிப்பதோடு வீதிகளில் சுகாதார நடைமுறையினை பிற்பற்றாது வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதனால் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதற்குரிய வாய்ப்பு காணப்படுகிறது.
இதனை தடுக்கும் முகமாக இன்று காலை கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கோப்பாய் பொலிசாரினால் விசேட சுற்று காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு அத்தியாவசிய சேவை தவிர்ந்து வீதியில் பயணித்தோர் மற்றும் பயணத்தடை வேளையில் சுகாதார நடைமுறையினை பின்பற்றாது வீதிகளில் வியாபார நடவடிக்கையில் ஈடுப்டோரின் விபரங்கள் பொலிசாரினால் சேகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்குட்படுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|