பயணச்சீட்டில் மோசடி – சிஐடியில் முறைப்பாடு – சம்பவம் தொடர்பில் விரிவான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன, அறிவிப்பு!

Monday, June 12th, 2023

இலங்கை போக்குவரத்து சபையினால் வழங்கப்பட்ட பயணச்சீட்டுகளை வழங்காமல் வேறு பயணச்சீட்டை விநியோகித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

மாத்தறையிலிருந்து மாகும்புர பல்நிலை போக்குவரத்து நிலையத்துக்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் நடத்துனர் ஒருவரே இவ்வாறு பயணச்சீட்டுக்களை விநியோகித்துள்ளார்.

எனினும், இது தொடர்பில் உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து திணைக்கள பிரதி பொதுமுகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட விடயத்தக்கு பொறுப்பான அமைச்சர் பந்துல குணவர்தன, குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.

அதேநேரம், இவ்வாறான செயற்பாடுகளில் மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: