பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

Friday, December 9th, 2016

அவுஸ்திரேலியாவுக்கு மேலே பாப்புவா தீவுக்கு அருகில் உள்ளது சொலமன் தீவு. சொலமன் தீவுப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை நேரப்படி சுமார் 11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 8 ஆக பதிவானதால், சொலமன் தீவு பகுதியில் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரகிராவின் தென்மேற்கு பகுதியில் இருந்து சுமார் 42 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல்கல் எதுவும் வெளியாகவில்லை.

சுனாமியால் அடுத்த மூன்று மணி நேரத்திற்கும் பாதிப்பு இருக்கும் என்று பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

58227628Solomon2

Related posts: