பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டம் – ஐ.நாவின் 42 ஆவது அமர்வில் அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Friday, February 3rd, 2023

பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது அமர்வில், இலங்கை தொடர்பான உலகளாவிய காலமுறை மீளாய்வு அறிக்கையை சமர்ப்பிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு இலங்கை செயற்பட வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: