பதவி வெற்றிடங்கள் தொடர்பில் சமுர்த்தித் திணைக்களம் போலி நடவடிக்கை!

Wednesday, January 23rd, 2019

சமுர்த்தித் திணைக்களத்திலுள்ள சிற்றூழியர் மற்றும் வாகனச் சாரதி வெற்றிடங்கள் அனைத்தும் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன என்று சமுர்த்தித் திணைக்களம் தெரிவித்துள்ளபோதும் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் சிற்றூழியர் மற்றும் வாகனச் சாரதி வெற்றிடங்கள் தற்போதும் உள்ளன.

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்கள் உட்பட மேலும் பல மாவட்டங்களில் காணப்பட்ட வெற்றிடங்களுக்கு ஆள்கள் மூன்று மாதங்களுக்கு முன்னரே நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ள போதும் இந்த மாவட்டங்களில் யாரும் இதுவரை கடைமைகளைப் பொறுப்பேற்கவில்லை.

சமுர்த்தி அமைச்சராக எஸ்.பி.திஸாநாயக்க பதவி வகித்த காலப் பகுதியிலேயே இந்த நியமனங்கள் அனைத்தும் துரித கதியில் வழங்கப்பட்டுள்ளன. எஸ்.பி.திஸாநாயக்க பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே இந்த நியமனங்களில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

வெற்றிடங்கள் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது என்று கணக்குக் காட்டப்பட்டபோதிலும் மாவட்டங்களில் குறித்த வெற்றிடங்கள் தொடர்ந்தும் நிலவுகின்றன.

Related posts: