பதவி விலகும் ஆளுநர்கள் !

Sunday, August 4th, 2019

மாகாண ஆளுநர்கள் புதிதாக நியமிக்கப்படும் செயற்பாடு இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது.

தற்போதுள்ள மாகாண ஆளுநர்கள் பலர் பதவி விலகிய நிலையில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இந்நிலையில், ஜனாதிபதி செயலகம் விடுத்த வேண்டுகோளை ஏற்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன நேற்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அதுபோலவே தென் மாகாண ஆளுநரும் இன்று தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இவர்கள் அனைவரும் பதவி விலகிய பின்னர் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்து எதுவித விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

Related posts: