பண்டத்தரிப்பு பெண்கள் கால்பந்தாட்ட அணியின் விவகாரம் – வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளரின் வெளிப்படுத்தல் ஏற்கத்தக்கவை இல்லை  – பெற்றோர் கடும் காட்டம்!

Thursday, March 1st, 2018

“காவலாளி காவலாளிக்குரிய வேலையைத்தான் பார்க்க வேண்டும்,அவர் அணியைப் பயிற்றுவிப்பது தவறு’’ என்று வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் சந்திர ராஜா தெரிவித்த கருத்துக்கள் ஏற்கத்தக்கவை அல்ல. ஒரு பாடத்திற்கு என்று அல்லது ஒரு விடயத்துக்கு என்று குறித்து ஒதுக்கப்பட ஆசிரியர்கள் தமது கடமைக்கு மேலதிகமாக செயற்படுகின்ற பதிவுகள் வடக்கு மாகாணத்தில் தாராளமாக உள்ளன -இவ்வாறு தெரிவித்தனர் பண்டத்தரிப்பு பெண்கள் கால்பந்தாட்ட அணியின் வீராங்கனைகளின் பெற்றோர்கள்.

யாழ்ப்பாண மாவட்ட விளையாட்டுச் சங்கம் நடத்திய வடமாகாணரீதியிலான கால்பந்தாட்டத் தொடரில் ,கடந்த 19 ம் திகதி நடைபெற்ற இறுதியாட்டத்தில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி மோதுவதாக இருந்தது ஆட்டத்தில் பண்டத்தரிப்பு பெண்கள் அணி களமிறங்காததை அடுத்து மகாஜன கிண்ணம் வென்றது.

மாகாண மட்டக் கால்ப்பந்தாட்டத் தெடரில் இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்ற ஓர் அணி அதில் களமிறங்காதமை அதிர்வலைகளைத் தோற்றுவித்தது . வலயக்கல்விப் பணிப்பாளர் பாடசாலை நிர்வாகத்திடம் பாடசாலையின் கல்வியடைவு தொடர்பில் கலந்தாலோசித்தமையின் பின்னணியில் அணி களமிறக்கப்படவில்லை என்று தெரிய வந்தது.

இதையடுத்து வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளருக்கும் வீராங்கனைகளின் பெற்ரோரிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது இந்தச் சந்திப்பின் பின்னர் உதயனுக்குத் கருத்துத் தெரிவித்த வலயக்கல்விப் பணிப்பாளர் “பாடசாலையில் தாம் என்னென்ன விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும் என்பதை பாடசாலைகளே முடிவு செய்ய வேண்டும் .அது அவர்களின் விருப்பம்.ஆனால் அவர்கள் என்ன விளையாட்டுக்களில் பங்கெடுத்தாலும் அது அந்தப் பாடசாலைக்கு என்று வழங்கப்பட்ட உடற்ககல்விப் பொறுப்பாசிரியரூடாகவே மேற்கொள்ளப்படல் வேண்டும். குறித்த பாடசாலையில் கால்ப்பந்தாட்ட அணிக்கு பயிற்சி வழங்குபவர் ஒரு காவலாளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது காவலாளி தனக்குரிய கடமையைத்தான் செய்ய வேண்டும். கணித பாடத்துக்கென்று குறித்தொதுக்கப்பட்ட ஆசிரியரைக் கொண்டு ஏனைய பாடங்களைக் கற்பிக்க முடியுமா?அவ்வாறான ஒரு நிலைப்பாடே இது’’ என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த பெற்றோர் தெரிவித்ததாவது :- நியமனத்தின் அடிப்படையில் தான் பாணிகள் அமைய வேண்டுமென்று வலயக்கல்விப்பணிப்பாளர் தெரிவித்தமை ஏற்கத்தக்கது .தற்போது பயிற்சி கொடுக்கும் பயிற்றுவிப்பாளர் எமது பிள்ளைகளுடன் மிகவும் கண்ணியத்தோடு நடந்து கொள்கின்றனர் .இது தவிர ஒன்றரை வருடங்களாக பயிற்சி கொடுத்து சமபோசா கிண்;ணத்துக்கான கால்ப்பந்தாட்டத் தொடரில் சம்பயன் கிண்ணத்துக்கான கால்ப்பந்தாட்டத் தொடரில் சம்பியன் கிண்ணத்தையும் பெற வைத்துள்ளார் இப்படி எமது பாடசாலை விளையாட்டுத்துறையில் வளர்ச்சி கண்டுவரும் நிலையில் அந்த வலயக்கல்விப் பணிப்பாளரே அதற்கு முட்டுக்கட்டை போடுவது எமக்கு வேதனையளிக்கின்றது.

கோலூன்றிப் பாய்தலில் தேசிய மட்டச் சாதனையாளராக உள்ள தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணியின் முன்னாள் வீராங்கனை அனித்தாவுக்கு பயிற்சி வழங்கியது ஆரம்பக் கல்வி நியமனம்  பெற்றவரே .அப்போது அவரின் பயிற்சிக்கு தடை விதித்திருந்தால் தமிழ் மங்கை தேசிய சாதனையாளராக உருவெடுத்திருக்க வாய்ப்பில்லை

இதே போல் யாழ்.கல்வி வலயத்துக் உட்பட்ட யாழ்.இந்து மகளிர் கல்லூரியின் கராத்தே பயிற்றுவிப்பாளர் ,யாழ் கோட்ட அலுவலகப் பணியாளர் பாசையூர் சென். அன்ரனிஸ்; மகளிர் கல்லூரியின் பளு தூக்கும் பயிற்றுவிப்பாளர் ,யாழ்.பளு தூக்;கும் சங்கத் தலைவர் உள்ளிட்ட பலரும் தத்தமது நியமனங்களுக்கு மேலதிகமாகவே பணியில் ஈடுபடுகின்றனர் .அவர்களுக்கு தடை விதித்தால் பாதிக்கப்படப்போவது மாணவர்களே

இது தவிர தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பல ஆண்டுகள் கால்ப்பந்தாட்டப் பயிற்றுவிப்பாளராக இருந்தவரே தற்போது பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை அணிக்கும் பயிற்றுவிப்பாளராக இருக்கின்றார் இவ்வளவு காலமும் இல்லாமல் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை அணி சாதிக்கும் காலத்தில் இவ்வாறு முட்டுக்கட்டை போடுவதென்பது எம்மிடத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது” என்றனர் அவர்கள்

Related posts: