பண்டத்தரிப்பு பகுதியில் குப்பைக்கு வைத்த தீயால் பற்றி எரிந்தது வீடு !

பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள வீட்டிற்கு அருகில் குப்பைக்கு வைத்த தீயால் வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.குறித்த சம்பவமானது இன்று முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த வீட்டில் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த உறவினர் ஒருவர், வீட்டினை முற்றாக சுத்தம் செய்துவிட்டு குப்பைக்கு தீ மூட்டியுள்ளார். இந்த தீயானது பற்றி ஏரியவே, அருகில் இருந்த வீட்டு மின் இணைப்பில் நெருப்பு பட்டு வீடு முழுமையாக சேதமடைந்ததுடன், அனைத்து உடமைகளும் எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ் மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து தீயணைப்பு படையினர் தற்போது தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். இருந்தும் வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன், குறித்த தீ விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
|
|