பட்டமளிப்பு நிகழ்வில் 2151 மாணவர்கள் பட்டம் பெற தகுதி!

Saturday, January 7th, 2017

மாதம் 10 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள யாழ்.பல்கலைக்கழக 32 ஆவது பட்டமளிப்பு நிகழ்வில் 2151 மாணவர்கள் பட்டம் பெறவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் கூறியுள்ளார்.

மேற்படி 32வது பட்டமளிப்பு விழா தொடர்பாக நேற்று காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே துணைவேந்தர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

32 ஆவது பட்டமளிப்பு நிகழ்வு இம் மாதம் 10 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த பட்டமளிப்பு நிகழ்வில் 2151 மாணவர்கள் பட்டதாரிகளாக பட்டம்பெற உள்ளனர். இதன்படி 164 மாணவர்கள் பட்டபின் தகமை சான்றிதளை பெற்றுக்கொள்வதுடன், 1275 மாணவர்கள் உள்ளக மாணவர்களாக பட்டம் பெற்றுக்கொள்ள உள்ளனர்.

அதேபோன்று 484 மாணவர்கள் வெளிவாரி பட்டதாரிகளாக பட்டம் பெற உள்ளதுடன் 32 மாணவர்கள் டிப்ளோமா பட்டதாரிகளாக பட்டம் பெற உள்ளனர். மேலும் இந்த பட்டமளிப்பு நிகழ்வுகளானது இரண்டு தினங்களாக ஒன்பது அமர்வுகளாக நடாத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என அவர் தெரிவித்தார்.

மேலும், இவற்றை விட இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவோர் தொடர்பான விபரங்கள் உட்பட மேலதிக தகவல்களை பெறவிரும்பின் அவர்கள் யாழ்.பல்கலைகழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை பார்வையிடுவதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

7b8f64d6646b5b61c3329aef34b68d67_XL

Related posts: