பட்டதாரிகளிற்கு நியமன கடிதம் வழங்கிவைப்பு!

வேலையில்லாபட்டதாரிகளிற்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
தொழில் பெறும் 50 ஆயிரம் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் உள்ளூராட்சி மாகாணசபை அமைச்சின் இணையத்தளத்தில் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் அதில் வெளியிடப்பட்டிருந்தது.
அவர்களிற்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.
நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்ட, அரச அதிபர் சமன்பந்துலசேன, மேலதிக அரச அதிபர் திரேஸ்குமார், பிரதேச செயலாளர்களான க.சிவகரன், இ.பிரதாபன், நா.காமதாசன், பிரதி தேர்தல் ஆணையாளர் லலித் ஆனந்த மற்றும் இராணுவ அதிகாரிகள் பட்டதாரிகளிற்கான நியமனக்கடிதங்களை வழங்கிவைத்திருநதமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விஜயகலாவின் புலிக்கதையால் நாடாளுமன்றத்தில் சலசலப்பு!
ஜனவரிமுதல் 06 மாதங்களுக்கு வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்த திட்டமிட்ம் - அமைச்சர் பந்துல குண...
சந்தை வட்டி விகிதங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு!
|
|