பங்களாதேஷ் சென்றடைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு பங்களாதேஷ் குடியரசின் பிரதமர் ஷெய்க் ஹசீனாவால் மகத்தான மகத்தான வரவேற்பு!

Friday, March 19th, 2021

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இன்று முற்பகல் பங்களாதேஷ் சென்றடைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு, பங்களாதேஷ் குடியரசின் பிரதமர் திருமதி.ஷெய்க் ஹசீனா அவர்களினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

பங்களாதேஷ் டாக்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் இராணுவத்தினரின் அணிவகுப்பும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை வரவேற்கும் முகமாக நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து பங்களாதேஷ் பிரதமர் திருமதி.ஷெய்க் ஹசீனா அவர்களினால் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பங்களாதேஷ் அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளை, இலங்கை பிரதமருக்கு அறிமுகப்படுத்தியதுடன், இலங்கை பிரதமரினால் இலங்கை தூதுக்குழுவினர் அந்நாட்டு பிரதமருக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இததையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விஜயத்தின் ஒரு அங்கமாக பங்களாதேஷ் சுதந்திர போரில் உயிர்நீத்த வீரர்களின் தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது பங்களாதேஷின் இராஜதந்திர அதிகாரிகளும் கலந்து கொண்டதுடன், அதனை தொடர்ந்து பிரதமர் அவர்கள் அந்நாட்டு விருந்தினர் புத்தகத்தில் சிறப்பு குறிப்பொன்றை வெளியிட்டார்.

000

Related posts: