பகிடிவதை குறித்த முறைப்பாடுகளை தெரிவிக்க தொலைபேசி இலக்கம் – பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு!

Wednesday, June 21st, 2023

பகிடிவதை குறித்த முறைப்பாடுகளை தெரிவிக்க தனியான தொலைபேசி இலக்கம் ஒன்று பொலிஸ் தலைமையகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்புடைய சம்பவங்கள் பரவலாக பதிவாகியிருந்தன.

இந்நிலையில் உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பகிடிவதைகள், நச்சு போதைப்பொருட்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் “1997” என்ற புதிய குறுகிய தொலைபேசி சேவையை பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேற்படி சம்பவங்கள் தொடர்பில் மாத்திரம் பொலிஸாருக்கு இந்த குறுகிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: