நோயாளர்களுக்கு சுகாதார தகவல்களை வழங்க அகலத்திரை தொலைக்காட்சி – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Saturday, August 13th, 2022

மருத்துவமனைகளில் உடனடி சுகாதார தகவல்களை வழங்குவதற்கு அகலத்திரை தொலைக்காட்சி அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று உலக வங்கியின் ஆரம்ப சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான திட்டப் பணிப்பாளரான முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 600 வைத்தியசாலைகளில் இது அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று கலந்து கொண்ட அவர் தெரிவித்தார்.

63 வைத்தியசாலைகளில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

000

Related posts:

மூன்றாம் நிலை நாடுகளைக் கொண்ட பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது இலங்கை நீக்கம் - ஐரோப்பிய ஆணைக்குழு அறி...
சவால்களைக் கண்டு தப்பித்து ஓடும் பழக்கம் எங்களிடம் இல்லை - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் - போதகர் ஜெரோமின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து உடனடியாக சிஐடி...