நேற்று பரிசோதிக்கப்பட்ட 15 பேருக்கும் கொரோனா இல்லை – யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்!

Tuesday, April 7th, 2020

யாழ்ப்பாணத்தில் நேற்று பரிசோதிக்கப்பட்ட 15 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் 8 பேருக்கும் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேருக்கும் நேற்றுப் பகல் ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவர்களில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று நேற்றிரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, யாழ்ப்பாணத்தில் இதுவரை 7 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றும் வைத்தியர் சத்தியமூர்த்தி மேலும் கூறினார்.

Related posts:

உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதியில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பே...
சமூக சகவாழ்வின் மகிமையை உலக சமூகத்திற்கு எடுத்துரைக்கும் ஒரு முக்கிய சமய விழாவாக ஹஜ் பெருநாள் அமைகின...
நாட்டில் டொலர்களுக்கு பற்றாக்குறை இல்லை - இறக்குமதி மற்றும் ஏனைய தேவைகளுக்கு போதுமான டொலர்கள் இருப்ப...