நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்றுமுதல் முன்னெடுப்பு – கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்பு!

Thursday, July 1st, 2021

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஒரு கிலோ நாட்டரிசி நெல் 50 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா நெல்லை 52 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்றுமுதல் முன்னெடுக்கப்பட்டள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும், உலராத நெல்லின் விலை 44 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் அரிசி பற்றாக்குறை இல்லை என்று கமத்தொழில் அமைச்சர் கூறியிருந்தாலும், சிலரது செயற்பாடகளால் அரிசி பற்றாக்குறை இருப்பதாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சந்தையில் அரிசியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ சிகப்பரிசியின் விலை 110 ரூபாவாகவும், பச்சை அரிசியின் விலை 115 ரூபாவாகவும், நாட்டரிசியில் விலை 125 ரூபாவாகவும், சம்பா அரிசியின் விலை 155 ரூபாவாகும், கீரி சம்பா அரசியின் விலையில் 220 ரூபாவாகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அரிசியின் விலையை கட்டுப்படுத்த 100, ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய சர்வதேச டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பண்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வோரிடமிருந்து அறவிடும் தண்ட பணத்தை 1 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அத்துடன் தண்டப் பணத்தை 1 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கும் தீர்மானத்துக்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து ஒரு மாத காலத்துக்குள் அந்த யோசனையை நாடாளுமன்றத்துக்கு அவசர சட்டமாக கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

27 அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலையை நிலையாக பேணுவதற்காக சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் மற்றும் பிரதான நிலை இறக்குமதியாளர்களிடம் செய்து கொண்ட இரு தரப்பு இணக்கப்பாட்டு ஒப்பந்தம் மூன்று மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில பிரதேசங்களில் நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. அரிசியின் விலையை நிலையான தன்மையின் பேணும் நோக்கில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானியின் தீர்மானத்துக்கு மாறாக செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபையின் ஊடாக உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வியாபாரிகளிடமிருந்து அறவிடப்படும் தண்டப்பணம் 2,500 ரூபாவாக காணப்படுகிறது.

அதேநேரம் தண்டப்பணத்தை 1 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இத்தீர்மானத்தை செயற்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒரு மாத காலத்திற்குள் இத்தீர்மானத்தை பாராளுமன்றில் அவசர சட்டமாக கொண்டு வர தீர்மானித்துள்மை குறிப்பிடத்தக்கது.

Related posts: