நெடுந்தீவு குதிரைகளின் பாதுகாக்க அக்கறை செலுத்த வேண்டும் – மக்கள் கோரிக்கை!

Tuesday, September 25th, 2018

நெடுந்தீவில் உள்ள குதிரைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை எவரும் மேற்கொள்ளாது அக்கறையின்றி உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டள்ளனர்.

தற்போது நெடுந்தீவில் கடும் வறட்சி காரணமாக குதிரைகள் பல உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் உரிய பராமரிப்பு இன்மையே என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இப்பகு தியில் குதிரைகள் இறப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அவற்றை பராமரிப்பதற்கான செயற்பாடுகள் எவையும் உருப்படியாக எவராலும் மேற்கொள்ளப்பட வில்லை . எனவே, வனஜீவராசிகள் திணைக்களமாவது இதில் கவனம் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த நெடுந்தீவுக் குதிரைகள் போத்துக்கேயரது ஆட்சிக் காலத்தில் அவர்களால் எடுத்து வரப்பட்ட குதிரைகளின் வழித்தோன்றல்களாக காணப்படுவதுடன் மிக நீண்டகாலமாக நெடுந்தீவில் வாழ்கின்றமையினால் இக்குதிரைகள் இப்பிராந்தியத்துக்குரிய தனித்துவமான ஒருரகமாக உயிரியலாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இக்குதிரைகள் சுற்றுலாச் சிறப்பு மிக்க நெடுந்தீவில் சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்ற உயிரியற் சொத்தாகவும் உள்ளது. மேலும் அங்கு காணப்படும் குதிரைகளை அப்பகுதி மக்கள் சவாரி செய்வதற்கும் மாடுகள் கலைப்பதற்கும் பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேற் குறித்த குதிரை இனங்களை பாதுகாக்க ஒரு குழுவை வடக்கு மாகாணசபை நியமித்திருந்தது. இக்குழு குதிரைகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்த நிலையில் எந்த வேலைத்திட்டமும் ஒழுங்காக மேற்கொள்ளப்படவில்லை.

இக்குதிரைகள் பாதுகாக்கப் பட்ட மரபுரிமைச் சொத்தாக தேசிய மரபுரிமைத் திணைக் களத்தால் பிரகடனப்படுத்தப் பட்டுள்ள போதிலும் இக் குதிரைகளை வேறிடங்களுக்கு கொண்டு செல்வது சட்டவிரோ தமாகும்.

ஆனால் ஒரு சிலரினால் இவை கடல் மார்க்கமாக கடத்திச் செல்லப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். இதே போன்று நெடுந்தீவுக்கே உரித்தான இவ்வாறான குதிரைகள் இவ்வாறு தொடர்ச்சி யாக வேறு பகுதிகளுக்கும் கடத்த பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்படுகிறது.

உல்லாசப் பயணிகளுக்கான கேந்திர நிலைய மாக நெடுந் தீவை மாற்றுவதற்கான நடவ டிக் கை களை தொல் பொருள் திணைக்களத்தினரும் வன ஜீவ ராசிகள் திணைக்களத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இக்குதிரைகளின் நலன்களில் எவ்வித அக்கறையும் செலுத்தியதாக தெரியவில்லை.

தற்போது நிலவுகின்ற வறட்சி காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வறண்டு போய் இருக்கின்றன. குதிரைகளுக்கு குடிப்பதற்கு நீர் இல்லாமலும் மேய்ச்சலுக் கென போதிய புல் இல்லாமலும் குதிரைகள் இறந்து வருகின்றன. சுமார் 50 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட சுற்றுலா சிறப்பு மிக்க நெடுந்தீவில் 4000 இற்கும் மேற்பட்ட குதிரைகள் இருப்பதாகக் கணிப்பிடப்பட்டி ருக்கின்றது.

Related posts: