நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடித்த மீனவர்கள் 10 பேர் கைது!

Thursday, January 5th, 2017

நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

இவர்கள் இன்று (05) அதிகாலை கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எல்லை மீறும் மீனவர்கள் குறித்து இந்திய – இலங்கை அமைச்சர் மட்ட பேச்சு கொழும்பில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரேயே இடம்பெற்றிருந்த நிலையில் இன்று அதிகாலை இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்குப் பயன்படுத்திய இரண்டு ரோலர் படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் கடற்தொழில்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

indian-fishermen

Related posts: