நெடுங்கேணி ஒலுமடுப் பகுதியில் யானைகள் குடிமனைகளுக்குள் புகுந்து அட்டகாசம் – மக்கள் ஆதங்கம்

Wednesday, May 3rd, 2017

வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடுப் பகுதியில் காட்டுயானைகள் குடிமனைகளுக்குள் புகுந்துமக்களின் குடியிருப்புகளுக்கு சேதம் விளைவிக்கும் அதேவேளை, பயன்தரு மரக்கன்றுகளையும் அழித்து வருவதாகவும், இதன் காரணமாக நாளாந்தம் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாகவும்  மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

யுத்தம் முடிவுக்குவந்ததன் பின்னர் மக்கள் குறித்தபகுதியில் வாழ்ந்துவரும் நிலையில் அங்குகுடியிருப்புகளையும் அமைத்துமுக்கியமாகமா,பலா,தென்னைஉள்ளிட்டபல்லாண்டுபயிர்களுடன்வாழைபோன்றபயன்தருமரக்கன்றுகளையும் நாட்டிவைத்தனர்.

அண்மையகாலங்களாகமக்களின் குடிருப்புகளுக்கு இரவுநேரங்களில் வருகைதரும் காட்டு யானைகள் மக்களின் குடியிரப்புகளுக்குபாரியசேதங்களைஏற்படத்தும் அதேவேளை , காணிகளில் நாட்டப்பட்டிருக்கும் தென்னை, வாழைபோன்ற பயன்தரு மரக்கன்றுகளையும்  அழித்துபெரும் நாசத்தையும் ஏற்படுத்திவருகின்றன.

இந்நிலையில் காட்டுயானைகளால் தாம் நாளாந்தம் எதிர்நோக்கும் இடர்பாடுகள் தொடர்பாக வன வளத் திணைக்களத்திடம் தெரியப்படுத்தியிருந்த நிலையில்,பாதுகாப்பு வேலியை அமைக்கும் பொருட்டு ஒரு வருடத்திற்கு முன்னர் தேவையான தூண்கள் பறிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றைக் கொண்டு இதுவரையில் எவ்விதமான பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றும்  மக்கள்  சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக குளங்கள் மற்றும் ஆறுகளில் நீர் வற்றியுள்ள நிலையில் யானைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் மக்களின் குடியிருப்புகளுக்குள் நுழைந்து அழிவுகளையும், சேதங்களையும் ஏற்படுத்திவருவதாகவும், இந்நிலைதொடரும் பட்சத்தில் குறித்த பகுதியில் தமது  இருப்புக் கேள்விக்குறியாகும் நிலையேஏற்படுமென்றும் மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது...
யாழ்ப்பாணத்தை கொரோனாவிலிருந்து பாதுகாக்க பொதுமக்களின் உதவி அவசியம் - யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. ம...
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் தலைமையில் கூட்டம் - ரயில்கள் மூலம் எரிபொருள் விநியோகத்தை விரிவுப...