நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம் – நடைமுறைக்கு வந்தது அதிகூடிய விலைக்கு பொருட்களை விற்பனைசெய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!

Thursday, September 23rd, 2021

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்திட்டுள்ளார்.

முன்பதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டம் நேற்றையதினம் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த திருத்தத்தின் ஊடாக அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிரான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் சில பொருட்களுக்கு நிர்ணய விலையினை குறிப்பிட்டு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்ட பின்னர், அதனை மீறுகின்ற வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன்படி, தனிநபர் வர்த்தகம் மற்றும் நிறுவனங்களுக்காக அறவிடப்படும் அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தனிநபர் வியாபாரங்களுக்காக விதிக்கப்பட்ட 1,000 ரூபா அபராதம் 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஒரு இலட்சம் ரூபா அபராதம் ஐந்து இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இரண்டாவது தடவையாகவும் அதிகூடிய விலைக்கு பொருட்களை விற்பனைசெய்யும் பட்சத்தில் 2 ஆயிரம் ரூபா தண்டப்பணத்திற்காக 20 ஆயிரம் ரூபாவும், 2 இலட்சம் ரூபாவிற்கு 10 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்படவுள்ளது.

நிறுவனம் ஒன்றில் குறித்த தவறு இழைக்கப்படும் பட்சத்தில் 10 ஆயிரம் ரூபா என்ற தண்டப்பணம் ஒரு இலட்சம் ரூபாவாகவும், ஐந்து இலட்சமாக நிலவிய அபராதம் 50 இலட்சம் ரூபாவாகவும் நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்டமையை அடுத்து இந்த அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டின் ஏற்றுமதி 12.13% ஆக அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஏற்றுமதி வருமானமாக ஆயிரத்து 83 மில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றுள்ளது.

அந்தவகையில் மாதாந்த ஏற்றுமதி வருமானமானது சிறந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: