நுகர்வோர் அதிகாரசபை தொழிற்சங்க நடவடிக்கையில்!

Tuesday, December 4th, 2018

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் சிலர், கேகாலை மாவட்டத்தில் விற்பனை நிலையங்களை பரிசோதனை செய்த வேளையில் அவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த அதிகாரசபையின் அதிகாரிகள் இன்று(04) தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அனைத்து விசாரணை அதிகாரிகளும் இன்று(04) சுற்றிவளைப்புகள் மற்றும் துறைசார் பணிகளிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டிகை காலத்தில் இவ்வாறு சுற்றிவளைப்புகளில் இருந்து விலகுதல், நுகர்வோரான மக்களுக்கு பாதகமான சூழல் என அகில இலங்கை நுகர்வோர் அதிகாரசபை விசாரணை அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் லங்கா திக்கும்புர குறிப்பிட்டுள்ளார்.

Related posts: