நீரை சிக்கனமாக பயன்படுத்தவும் – கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு!

Wednesday, April 6th, 2022

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை  கேட்டுக்கொண்டுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து  மக்களின் நாளாந்த  தேவைக்கு ஏற்ற அளவில் நீரை சுத்திகரித்து விநியோகிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையினை கருத்தில் கொண்டு எதிர்வரும் நாட்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிளிநொச்சி, முல்லைத்தீவு அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: