நிலையான அரசாங்கம் விரைவில் அமைக்கப்படாவிட்டால் நாடு ஸ்தம்பிக்கும் – மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரிக்கை!
Friday, July 15th, 2022நிலையான அரசாங்கம் விரைவில் அமைக்கப்படாவிட்டால் நாடு ஸ்தம்பிக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
அத்தியாவசிய பெட்ரோலியத்திற்கு செலுத்த போதுமான அந்நிய செலாவணி கிடைக்குமா என்பதில் “நிச்சயமற்ற நிலை” உள்ளது என்று கூறினார்.
சர்வதேச பிணை எடுப்புப் பொதியைப் பெறுவதற்கான முன்னேற்றம் நிலையான நிர்வாகத்தைக் கொண்டிருப்பதில் தங்கியுள்ளது என்றார். பொருளாதார நெருக்கடியால் நாடு வெகுஜன அமைதியின்மையின் பிடியில் உள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதையடுத்து, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டாவது நாளாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதையும், உணவு, எரிபொருள் மற்றும் ஏனைய அடிப்படைப் பொருட்களின் விலை சாதாரண மக்களுக்கான விலை உயர்வையும் கண்டுள்ளது’ என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|