நிலைமைகளை ஊடகங்கள் புரிந்தகொள்ள வேண்டும் – பிரதமர்!

Monday, November 7th, 2016
முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிரிந்திவெல மில்லதே ஸ்ரீ விஜயராம விஹாரையில் நடைபெற்ற வைபவமொன்றில் பிரதமர் உரையாற்றினார்.பிரதமர் ரணில் விக்ரமசிங்க இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கு தேவையான விரிவான வேலைத்திட்டம் தற்போது வகுக்கப்பட்டுள்ளது அதிகாரத்தை பெற்றுக்கொள்ளவே நாம் தேசிய அரசாங்கத்தை அமைத்தோம். நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதுவே எமது நோக்கம் பிரதான இரண்டு கட்சிகளின் பலம் எம்மிடமுள்ளது. ஐயவர்தன அவர்களுக்கு ஆறில் ஐந்து பெருபான்மை கிடைத்த போது பணடாரநாயக்கவின் கட்சி இல்லாமற்போனது. வன்முறைகள் இடம் பெற்றன. ஐக்கிய தேசியக்கட்சி இல்லாமற் போகவில்லை. யுத்தம் ஏற்பட்டது  ஐக்கிய தேசியக்கட்சி அழிந்துவிடவில்லை.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கம் எம்மிடம் இல்லை. எம்மை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இல்லை. இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதன் பின்னர் சில வேளை எமக்கு அதிகாரம் கிடைக்கலாம். சில வேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு அதிகாரம் கிடைக்கலாம். இல்லா விட்டால் ஜேர்மனியைப் போன்று இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவேண்டி ஏற்படும். அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போரும் உள்ளனர். எனினும் ஊடகங்களுக்கே இதில் பாரிய பிரச்சினை உள்ளது. நாம் ஒன்றிணைந்தால் ஊடகங்கள் கவிழ்ந்து விடும் என்று நினைக்கின்றார்கள். என்ன நடக்கிறது என்பதனை ஊடகங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

399e5a564d0f3dae3cca5f62f1dcc6d9_XL

Related posts: