நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தொழிலை இழக்கச் செய்யாமல் பேணுவதற்கு நடவடிக்கை முன்னெடுப்பு – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!
Wednesday, June 30th, 2021ஒரு சில நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தொழிலை இழக்கச் செய்யாமல் பேணிக் கொண்டு செல்வதற்காக, சலுகை வழங்கும் நோக்கில் – தொழில் வழங்குனர்கள், ஊழியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்ட செயலணி மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்காக அமைச்சரவை முன்னர் அங்கீகாரம் வழங்கிய்யிருந்தது.
அதற்கமைய அனைத்து ஊழியர்களுக்கும் பணி புரிவதற்கான சமமான வாய்ப்புக்களை வழங்கல் உறுதிப்படுத்தப்பட்டள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் ஊழியர்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டுமாயின், இறுதியாக செலுத்தப்பட்ட மொத்த மாதாந்தச் சம்பளத்தின் 50 வீதம் அல்லது 14,500/= தொகையில் அதி கூடிய தொகையை வழங்கல் மற்றும் மேற்படி சம்பளத்திற்காகத் தொழில் வழங்குனரால் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கு (ETF) பணம் செலுத்தப்படல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதேவேளை உலகளாவிய ரீதியில் சர்வதேச விமானப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், குறிப்பாக எமது நாட்டில் சுற்றுலாத் துறையை வழக்கமான வகையில் பேணிச்செல்ல இயலாமல் இருப்பதனால் – சுற்றுலாத் துறையில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்குத் தற்போது வழங்கப்பட்டுவரும் சலுகைகளை, 2021 யூலை மாதம் தொடக்கம் 2021 டிசம்பர் மாதம் இறுதி வரைக்கும் மேலும் நடைமுறைப்படுத்துதல் என்பவற்றுக்கு அரசாங்கம் உடன்பாடு வழங்குகின்றது என்றும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|