நிறுவனங்களின் தேவைக்கேற்ப தனித்தனியான சேவையை வழங்க முடியும் – இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!

Sunday, May 3rd, 2020

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை புதிய திட்டங்களை வகுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் அந்தந்த நிறுவனங்களுக்கு தனித்தனியாக பேருந்துகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றும் இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே எதிர்வரும் 4ஆம் திகதியிலிருந்து அத்தியாவசிய சேவைகளுக்காக வரும் பணியாளர்களுக்காக புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் அந்த சேவையாளர்கள் குறித்த நிறுவன பிரதானியிடமிருந்து கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தால் மாத்திரமே புகையிரதத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் புகையிரதத்தில் பணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் நபர்களுக்கு SMS மூலம் அறிவிக்கப்பட்டும் என்றும் புகையிரதத்தில் பணிப்பதற்காக இந்த SMS தகவலை பாதுகாப்பு பிரிவினரிடம் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் புகையிரதத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:


தமிழ் அரசியல் தலைமைகளுக்கிடையில் ஒற்றுமை உருவாகுமானால் அதில் ஈ.பி.டி.பி முதன்மைக் கட்சியாக செயற்படு...
அனைத்து மரக்கறிகளின் மொத்த விலைகள் 30 வீதத்தால் குறைந்துள்ளது - தம்புள்ளை மொத்த வியாபாரிகள் சங்கம் ...
கடந்த ஒரு வாரத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 250 பேர் கைது - 25 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அன...