நிர்மாணத்துறையின் சவால்களை வெற்றிகொள்ள உடனடி நடவடிக்கை – ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!
Saturday, October 22nd, 2022நிர்மாணத்துறையில் எழுந்துள்ள சவால்கள் மற்றும் உத்தேச எதிர்கால செயல்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் கடந்த (20) ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நிர்மாணத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் மற்றும் வீதிகளை நிர்மாணிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
ஒப்பந்ததாரர்கள், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நிர்மாணத் துறையை தொடர்ந்து செயற்படுத்தல் மற்றும் இத்துறையின் தொழில் பாதுகாப்புக்காக பின்பற்றப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்த ஜனாதிபதி, இது தொடர்பில் மேலும் கலந்துரையாடி பரிந்துரைகளை வழங்குவதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கும் முன்மொழிந்தார்.
நிர்மாணத்துறையின் மேம்பாட்டுக்காக விசேட செயலணி ஸ்தாபிக்குமாறும் களப்பணியாளர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளரத குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|