நிதிப்பற்றாக்குறை – அரச ஊழியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவில் சிக்கல்!

Wednesday, June 24th, 2020

நிதிப்பற்றாக்குறையினால் மாகாண சபைகளுக்குட்பட்ட அரச ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், சுகாதார ஊழியர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்களால், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுக்கு அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில், மேலதிக நேர கொடுப்பனவின் மொத்த தொகையை அறிவிக்குமாறு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கைகள் கிடைத்தவுடன் திறைசேரியிடமிருந்து நிதியை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts: