நிதிநிலை குறித்த அறிக்கையை பகிரங்கப் படுத்தினால் அது பாரிய பிரச்சினையாக அமையும் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Saturday, January 29th, 2022

நாட்டின் நிதிநிலை குறித்த அறிக்கையை பகிரங்கப் படுத்தினால் அது பாரிய பிரச்சினையாக அமையும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அமைச்சரவையில் முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“கொடுக்க முடியும். ஆனால் அது இங்கே ஒரு பெரிய பிரச்சினை. நான் அதை அமைச்சரவைக்கு வழங்கு வேன்” என்று நிதி அமைச்சர் கூறினார்.

அவ்வாறான அறிக்கை கிடைத்தால் நல்லது எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி அடுத்த அமைச்சரவையில் அறிக்கையைச் சமர்ப்பிக்க நிதி அமைச்சர் இணங்கியுள்ளார்.

இதேவேளை, இவ்வருடம் இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன் தொகை 690 மில்லியன் அமெரிக்க டொலர் என நிதியமைச்சு அமைச்சரவைக்கு அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: