நாவற்குழி விகாரைக்கு எதிராக எவரும் நீதிமன்றம் செல்ல முடியும் – சட்டம் அனைவருக்கும் ஒன்றே என்கிறார் வடக்கு ஆளுநர்!

Thursday, June 1st, 2017

யாழ்.நாவற்குழி பகுதியில் பௌத்த தாது கோபுரம் நிறுவுவதற்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்படவில்லையாயின் அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியும். என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே கூறியுள்ளார்.

இலங்கையில்  சகல மக்களுக்கும் சட்டம் ஒன்றே, யாழ்ப்பாணம் இலங்கைக்கு வெளியே இல்லை. இலங்கைக்குள்ளேயே யாழ்ப்பாணம் உள்ளது. எனவும் தெரிவித்தார்.தெற்கில் யாரும் விரும்பியபடி விகாரைகளையோ கோவில்களையோ பள்ளிவாசல்களையோ கட்ட முடியும். அங்கு எந்தத் தடைகளும் இல்லை எனவும் கூறினார். இதேவேளை தாது கோபம் நிறுவுவதற்கு அனுமதி பெற வேண்டுமா என்பது தொடர்பாக தான் ஆராய வேண்டும் எனவும் கூறினார்.

ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இலங்கையின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்கு வடக்கு மக்களும் உதவிகளை வழங்குவதன் மூலம் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார். சுனாமி அனர்த்தம் உருவான போது இனம், மதம், சாதி பாராமல் பணியாற்றியதைப் போல இப்போதும் பணியாற்றுவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Related posts: