நாளை யாழ் இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் கடற்றொழிலாளர்கள் !

Thursday, October 7th, 2021

இந்திய மீனவர்களது எல்லைதாண்டிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக முற்றுகைப் போராட்டத்தை நடத்த உள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன துணை தலைவர் வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்திய அவர் மேலும் தெரிவிகையில்,

தொடர்சியாக எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்திய இலங்கை அரசாங்கங்கள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் நாளை (08) காலை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணை தூதரகம் முன்பாக போராட்டம் நடத்த உள்ளோம்.

மேலும், அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவாகார செயலர் வருகைதந்த போது தமிழ் அரசியல் வாதிகள் எவரும் மீனவர் பிரச்சினை தொடர்பில் அவருடன் பேசவில்லை.

எமது பிரச்சினையை பேசுவதற்கு யாரும் இல்லை. இந்நிலையிலேயே நாம் இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொள்ளவுள்ளோம். எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் எமது மீனவர்கள் பல கோடி சொத்துக்களை இதுவரை இழந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: