நாளை பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்றம் கூடும்!

Thursday, November 15th, 2018

நாளையதினம் பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றையதினம் சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை தொடர்ந்து அவர் இன்று விசேட உரை ஒன்றை ஆற்றினார்.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியினர் சத்தங்களை எழுப்பியவாறு பிரதமரின் ஊரைக்கு இடையூறு விளைவித்தனர்.
இதனையடுத்து ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சில மணி நேரங்கள் பாராளுமன்றத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், அவயை விட்டு வெளியேறிய சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தின் அடுத்த கட்ட நகர்வு குறித்து கட்சி தலைவர்களுடன் ஆலோசித்தார்.
இதன்விளைவாக எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் நாளைய தினம் பிற்பகல் 1.30 மணிக்கே நாடாளுமன்றம் கூடவுள்ளதாக குறித்த 4ட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே பாதுகாப்பு அமைச்சை தவிர ஏனைய 30 அமைச்சுக்களுக்கும் விசேட பொலீஸ் மற்றும் அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழப்பங்களை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நாட்hளுமன்ற வளாகத்திலும் பாதகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

Related posts: