நாளை நள்ளிரவுமுதல் 1000 ரூபாவினால் அதிரடியாகக் குறைகிறது லிட்ரோ எரிவாயு விலை – நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!
Monday, April 3rd, 2023
லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலை, நாளை (4) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
விலை சூத்திரத்துக்கமைய, இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலனின் விலை சுமார் 1000 ரூபாவினால் குறைக்கப்படுமென லிட்ரோ நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார். தற்போது, 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலை 4,743 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய தேர் பவனி இன்று!
வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகள் தொடர்பில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை – யாழில் இராஜாங்க அமைச்சர் அ...
2018 ஆம் ஆண்டு தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 2,518 பயிற்சியாளர்களுக்கு நியமனம் வழங்க ...
|
|
|


