நாளை திறைசேரி உத்தரவாதம் வழங்கினால் இரண்டு நாட்களில் வர்த்தமானி வெளியிடப்படும் என தகவல்!
Monday, March 6th, 2023
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைசேரியினால் தேவையான உத்தரவாதம் நாளை செவ்வாய்க்கிழமை வழங்கப்படுமாயின், தேர்தலை நடத்துவதற்கான திகதி புதன் அல்லது வியாழன் அன்று வர்த்தமானியில் வெளியிடப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழு நாளை காலை தேர்தல் நாள் குறித்து முடிவு செய்வதற்காக திறைசேரி செயலாளர், அரசாங்க அச்சக அதிகாரி மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை சந்திக்க உள்ளது.
திறைசேரியினால் தேவையான உத்தரவாதம் வழங்கப்பட்டால் வர்த்தமானி வெளியிடப்பட்டு பின்னர் தேர்தல் வர்த்தமானி அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்படும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 9 ஆம் திகதி நடைபெறும் என முதலில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்த போதிலும், நிதி உள்ளிட்ட பிரச்சினைகளினால் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஆசிரியர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் - நீதிபதி இளஞ்செழியன்!
வரலாற்று பிரசித்திபெற்ற சந்நிதி முருகன் திருவிழாவில் அன்னதானம் - காவடிக்கு முற்றாகத் தடை - சுகாதார ம...
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை 98 ரூபாவுக்கு சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை - சதொச நிறுவனத்தின் தல...
|
|
|


