நாளைமுதல் 7ஆம் திகதிவரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை – கல்வியமைச்சு அறிவிப்பு!

Monday, August 3rd, 2020

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைமுதல் எதிர்வரும் 7ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் 4, 5, 6 மற்றும் 7ஆம் திகதிகளில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 27ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள தரம் 11, 12 மற்றும் 13ஆம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும் ஏனைய தரங்களுக்கான கல்வி நடவடிக்கை ஓகஸ்ட் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது சுகாதார வழிகாட்டுதல்களை அவசியமாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கல்வி அமைச்சகம் அனைத்து அதிகாரிகளுக்கும் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, இராஜாங்கனை மற்றும் வெலிகந்த கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்படாது என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு நாளைமுதல் எதிர்வரும் 7ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


உலக சனத்தொகையில் பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு - உலக சுகாதார அமைப்பு கவலை!
வெளிநாடுகளுக்கு பயிற்சிக்கு சென்ற அரச அதிகாரிகள் மீண்டும் பணிக்குத் திரும்பவில்லை என குற்றச்சாட்டு!
வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துக்களை அள்ளி வீசி அரசியல் செய்பவர்களுக்குச் சிறைச்சாலை வாழ்க்கைதா...