நாளாந்தம் 8 இலட்சம் லீற்றர் டீசல் வழங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர இணக்கம் – தனியார் பேருந்துகளில் 50 வீதமானவை இன்றுமுதல் சேவைகளை முன்னெடுப்பதாக சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Monday, June 20th, 2022

தொடர்ந்தும் டீசல் வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போ மேற்கொண்ட இணக்கப்பாடு காரணமாக இன்று (20) முதல் அனைத்து தனியார் பேருந்துகளில் 50 வீதமான சேவைகள் இடம்பெற்றுவருவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்றுமுதல் நாடளாவிய ரீதியில் 10,000 இற்கும் மேற்பட்ட பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போ மூலம் நாளாந்தம் 800,000 லீற்றர் டீசல் வழங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விஜேரத்ன தெரிவித்துள்ளார்..

இந்த வாரம் 70% க்கும் அதிகமான தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு பதிலாக பொது போக்குவரத்தை முடிந்தவரை பயன்படுத்துமாறு பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், ”என்றும் விஜேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: