நான்கு மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மின்தடை

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை(20) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் படி, இன்று காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.குடாநாட்டின் சில்லாலை, சாந்தை ஆகிய பகுதிகளிலும், காலை-08 .30 மணி முதல் மாலை- 05 மணி வரை கிளிநொச்சியின் கரைக்கட்டுக்குள ம் பகுதியிலும்,
காலை-08 மணி முதல் மாலை- 05.30 மணி வரை மன்னார் மாவட்டத்தின் திருக்கேதீஸ்வரம் பிரதேசத்திலு ம்,
காலை-08 மணி முதல் மாலை 05.30 மணி வரை வவுனியா மாவட்டத்தில் நெளுக்குளம் தொழிநுட்பக் கல்லூரி, நெளும்பைக்குளத்திலிருந்து பம்பை மடு வரை, பம்பைமடு பல்கலைக்கழகம், சாளம்பைக்குளம் பிரதேசம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுளள்து.
Related posts:
சமாதானம் முன்னிறுத்தி யாழ்ப்பாணத்தில் தேசிய விளையாட்டு விழா!
இலங்கை - மாலைதீவு நாடாளுமன்றங்களை ஒருங்கிணைக்க பேச்சு!
கொரோனா வைரஸ்: இத்தாலியில் இதுவரை 50 சுகாதார பணியாளர்கள் மரணம்!
|
|